சட்டப்பேரவை தொடங்கும் நாளன்று குடிநீர் பிரச்சனை குறித்து சிறப்பு தீர்மானம் எடுக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை : சட்டப்பேரவை தொடங்கும் நாளன்று குடிநீர் பிரச்சனை குறித்து சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து அதிமுக அரசு விவாதிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தண்ணீர் நெருக்கடியால் ஏற்கனவே நலிவடைந்துள்ள மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தையும் சீர்குலைக்கும் என்று தெரிவித்தார். தண்ணீர் பிரச்சனை இல்லை என்று கூறி உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மக்களை கொச்சைப்படுத்துகிறார்.

பேட்டிகள் கொடுப்பதை அமைச்சர்கள் நிறுத்திக் கொண்டு குடிநீர் பிரச்சனையை சமாளிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் முனைப்புக் காட்ட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அனைவருக்கும் குடிநீர் கிடைத்திட ஆவண செய்து தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க அரசு முன்வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

குடிநீர் பிரச்சனையை சமாளிக்க கேரள அரசு வழங்க முன் வந்த தண்ணீரை ஏற்க மறுத்துள்ள தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கேரள அரசு வழங்குவதாக அறிவித்துள்ள குடிநீரை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: