வங்கக்கடலில் பகுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதாவது; வடக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது முதலில் வடக்கு நோக்கி நகர்ந்து பின்னர் வடமேற்கு திசையில் நகரும் என கூறப்படுகிறது. வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Advertising
Advertising

அதேபோல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை தொடங்கியது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அப்பகுதிகளில் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. மழையின் காரணமாக தமிழகத்தில் நிலவிவரும் வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. கடல்காற்று நிலப்பகுதியை நோக்கி வீசுவதால் வெப்பநிலை குறையும் எனவும் கூறியுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை. ஆந்திரா, மேற்கு மாநிலங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது.

Related Stories: