ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் ஏ.ஆர்.மங்கலம் பஞ்சாயத்திற்கு உட்பட்டு புத்தனேந்தல், கொண்னக்குடி, குலநாத்தி, பகவதி மங்கலம், வாகைக் குடிகற்களத்தூர் குமுளியேந்தல், கண்ணுகுடி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. ஏ.ஆர்.மங்கலம் ஊராட்சிக்கு திட கழிவு மேலாண்மை திட்டத்தில் 10க்கும் மேற்பட்ட குப்பை ெதாட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த குப்பை தொட்டிகள் நீண்ட காலமாக பயன்பாடின்றி, ஊராட்சி மன்ற வளாகம் முன்பு காட்சிப் பொருளாக உள்ளன.