மக்களவை சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

டெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணியின் மக்களவை சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி. ஓம் பிர்லாவுக்கு அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆதரவு அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லாவின் பெயரை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 4 அமைச்சர்கள் முன் மொழிந்தனர்.

ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவித்து பிஜு ஜனதா தள கட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இதனையடுத்து தேசிய மக்கள் கட்சி, லோக் ஜனதா கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 10 கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை அமைச்சர் பிரகலாத் ஜோதி செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

பாரதிய ஜனதா மக்களவையின் பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் ஓம் பிர்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி ஆகி உள்ளது. ஒரு வேளை சபாநாயகர் பதவிக்கு போட்டி வேட்பாளர் நிறுத்தப்பட்டால் நாளை தேர்தல் நடைபெறும். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிர்லா அம்மாநிலத்தின் கோட்டா தொகுதியிலிருந்து 2 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ராம் நாராயணன் மீனாவை 2 லட்சத்து 50வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் ஓம் பிர்லா ஆவார்.

Related Stories: