குடி போதையில் பஸ் ஓட்டிய விவகாரம் டிரைவர், கண்டக்டர் அதிரடி சஸ்பெண்ட்

சென்னை: குடி போதையில் பஸ் ஓட்டிய டிரைவர் மற்றும் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கடந்த 16ம் தேதி இரவு திருச்சிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. பெருங்களத்தூர் சென்றதும் பஸ் நிறுத்தப்பட்டது. இறங்கிச்சென்ற டிரைவரும், கண்டக்டரும் சுமார் அரை மணி நேரம் கழித்து மீண்டும் வந்து பஸ்சை இயக்கினர். மறைமலைநகர் அருகே வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்,  அங்குமிங்கும் சென்றதால் டிரைவர் மீது பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  சிங்கபெருமாள்கோவில் அருகே பஸ் வந்த நிலையில், ஒரு பயணி சென்று டிரைவரிடம் விசாரித்தபோது, அவர் குடிபோதையில் இருப்பது தெரிந்தது. இதன்பிறகு அனைத்து பயணிகளும் சேர்ந்து மறைமலை நகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவர், கண்டக்டரிடம் கருவி மூலம் பரிசோதனை நடத்தினர்.

.

அப்போது இருவரும் குடிபோதையில் இருப்பது தெரிந்தது. பிறகு பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பஸ் கண்டக்டர், டிரைவர் இருவரையும் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘டிரைவர், கண்டக்டர் குடிபோதையில் இருந்த விவகாரம் ெதாடர்பாக விசாரித்த அதிகாரிகள் அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். தொடர்ந்து துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: