உலகக்கோப்பை கிரிக்கெட் ‘பீவர்’ பெரிய டிவிக்கள் விற்பனை விர்ர்ர்: வட மாநிலங்களில் 100 சதவீதம் உயர்வு

புதுடெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கும் நிலையில், அதிக விலையுள்ள பெரிய திரை டிவிக்கள் விற்பனை 100 மடங்கு அதிகரித்துள்ளது.   சோனி, சாம்சங், எல்ஜி, பானாசோனிக் போன்ற பிராண்டுகளின் பெரிய டிவிக்கள் அதிக அளவில் விற்பனை ஆகி வருகின்றன. மழையால் அவ்வப்போது போட்டிகள் தடைபட்டாலும், ரசிகர்களின் ஆர்வம் தடைபடவில்லை. அவர்கள் பெரிய  திரைகளில் பார்க்க வேண்டும் என்று பல ஆயிரம் பணத்தை கொடுத்து டிவி வாங்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.

  இது குறித்து விற்பனையாளர்கள் தரப்பில் கூறியதாவது: ஸ்மார்ட் டிவிக்களில் 55 அங்குல டிவிக்கள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. பல கடைகளில் 100 சதவீதம் அளவுக்கு கடந்த ஒரு மாதத்தில் டிவிக்கள் விற்பனை அதிகரித்துள்– ்ளது.   சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா என்று மட்டுமல்ல, பெங்களூரு, ராய்ப்பூர், ஜபல்பூர், ராஞ்சி, ெகாச்சி என்று பல நகரங்களிலும் டிவி வாங்குவது அதிகரித்து உள்ளது.
Advertising
Advertising

  இதனால், பல பிராண்டு டிவிக்களுக்கு நிறுவனங்கள் சலுகை தருகின்றன. நாக் அவுட் போட்டிகள் வரும் போது டிவிக்கள் விற்பனை இன்னும் அதிகரிக்கலாம். நவீன 4கே டிவிக்கள் விற்பனை தான் அதிகமாக உள்ளது.  பொதுவாக மே மாதங்களில் பெரிய அளவில் விற்பனை இருக்காது. இந்த முறை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி காரணமாக மே மாத ஆரம்பத்திலேயே டிவிக்கள் விற்பனை அதிகரிக்க ஆரம்பித்தது.   டிவிக்களில் 55 அங்குல 4கே டிவிக்கள், க்யூலெட் டிவிக்கள், 75 அங்குல டிவிக்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது.   வழக்கமாக பண்டிகை தினங்களை ஒட்டி தான் டிவி உட்பட எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். ஆனால், இப்போது விளையாட்டு போட்டிகளை ஒட்டியும் விற்பனை அதிகரித்து வருவது வியாபார நிறுவனங்களுக்கு புது வாய்ப்பு.  இனி ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு சீசன்களை ஒட்டியும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனைக்கு சலுகை அதிகரிக்கலாம்.  இவ்வாறு விற்பனையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: