ஈகியூ மைண்ட் நிறுவனம் 600 கோடி சுருட்டியது: கர்நாடகாவில் மேலும் ஒரு மெகா மோசடி

பெங்களூரு: ஐஎம்ஏ நகைக்கடை மோசடியை போல், கர்நாடகாவில் ‘ஈகியூ மைண்ட்  மார்க்கெட்டிங்’ என்ற நிறுவனமும் ரூ.600 கோடி வரை மக்களிடம் முறைகேடு செய்துள்ளது. பெங்களூரு  சிவாஜி நகர் ஐஎம்ஏ நகைக்கடை நிறுவனத்தின் கவர்ச்சி திட்டத்தில் முதலீடு செய்து ஏமாந்த மக்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. துபாயில் உள்ள இதன் உரிமையாளர்  மன்சூர்கானை கைது செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துமகூருவில் மற்றொரு மெகா மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இங்கு சமீபத்்தில் தொடங்கப்பட்ட ‘ஈகியூ மைண்ட் மார்க்கெட்டிங்’ என்ற நிறுவனம்,முதலீடுகளுக்கு அதிக வட்டி  தருவதாககவர்ச்சி திட்டங்களை  அறிவித்தது.

இதை நம்பி, ஆயிரக்கணக்கான மக்கள்  பணத்தை முதலீடு செய்தனர். நிறுவனம் தொடங்கப்பட்ட சில மாதங்களில் ரூ.600  கோடி வரை முதலீடு கிடைத்தது. இந்நிலையில், இந்த அலுவலகம் இப்போது பூட்டப்பட்டு கிடக்கிறது. இந்த தகவல்  காட்டுத்தீ போல் வேகமாக  பரவியதால் முதலீடு செய்தவர்கள் அதிகளவில் குவிந்தனர். போலீசில் புகார் அளித்தனர். இந்த நிறுவனத்தில் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மதுரை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளை  சேர்ந்தவர்களும் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்–்கிறது.  இந்த மோசடி குறித்து விசாரிக்க, மாவட்ட  போலீஸ் கண்காணிப்பாளர் கோணவம்சி கிருஷ்ணா தனிப்படை அமைத்துள்ளார். நிறுவனத்தின்  தலைவர் முகமது அஸ்லாம் உட்பட, அதன் நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கர்நாடகாவில் அடுத்தடுத்து நடந்துள்ள இந்த மெகா மோசடியால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: