சென்னை உட்பட 11 மாவட்டங்களில் வெயில் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: சென்னை உட்பட 11 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட 2-4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு கன மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்திலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக வால்பாறை, குளச்சல், பேச்சிப்பாறை, குழித்துறை, பெரியாறு, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 20 சதவீதத்திற்கு மேல் மழை பதிவானது.

மற்றொரு புறம் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கிறது. அனல்காற்று வீசி வருவதால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதற்கே தயக்கம் காட்டும் சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட 2-4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மேலும் அந்தமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, மதுரை,  திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 11 மாவட்டங்களில் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் 2-4 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகமாக வெயில் இருக்கும்.

தகிக்கிறது திருத்தணி

தமிழகத்தில் நேற்று பெரும்பாலான பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் திருத்தணியில் வெயில் அதிகமாக இருந்தது. இங்கு, 111.2 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி எடுத்தது. இதற்கு அடுத்தபடியாக வேலூர்-107.96; சென்னை-107.78 டிகிரியாக இருந்தது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Related Stories: