மது பிரியர்களை கவரும் முயற்சியில் சான்பிரான்சிஸ்கோவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ராட் பார்

சான்பிரான்சிஸ்கோ: கலிபோர்னியா மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ள ராட் பார் என்ற மதுபான விடுதி மது பிரியர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்லும் இடமாக உள்ள சான்பிரான்சிஸ்கோவின் ஜென்ஜியனில் புதியதாக ராட் பார் என்ற மதுபான விடுதி திறக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுதிக்கு வரும் விருந்தாளிகளுக்கு எலிவால் போன்ற பீட்ரூட் ஊறிய மதுபானம் கொடுக்கப்படுகிறது.

Advertising
Advertising

பின்னர் அவர்கள் அனைவரும் அங்குள்ள இருட்டறையில் பராமரிக்கப்படும் எலிகளை பார்க்கவும், அதனுடன் செல்ல பிராணிகளை போல கொஞ்சி விளையாடவும், மேலும் புகைப்படம் எடுத்து மகிழவும் அனுமதிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து எலிகளுடன் விளையாடுவதற்காக இந்த மதுபான விடுதிக்கு வரும் பார்வையாளர்கள் வீட்டில் இவ்வகை உயிரினங்களை பராமரிக்க முடியாது என்பதால் இங்கு வந்து செல்வதாக தெரிவிக்கின்றனர்.

Related Stories: