திருமுருகன் காந்திக்கு நிபந்தனை முன்ஜாமீன் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி சென்னை வடக்கு கடற்கரை சாலை, திருவல்லிக்கேணி, வள்ளுவர்கோட்டம் ஆகிய இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, நீதித்துறையையும், போலீசையும் கடுமையாக விமர்சனம் ெசய்து பேசினார்.

இது தொடர்பாக அவர் மீது 4 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டது. இவற்றில் முன்ஜாமீன் கேட்டு அவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, மனுதாரர் மத்திய அரசையும், நீதித்துறையையும் கடுமையாக, தேவையில்லாமல் விமர்சித்துள்ளார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் இனிமேல் இதுபோன்று கூட்டங்களில் பேசக் கூடாது என்ற நிபந்தனையுடன் இருநபர் உத்தரவாதத்தில் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related Stories: