தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழக்க அரசே காரணம்: வைகோ புகார்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஸ்டெர்லைட் ஆலைக்கு மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலைய எதிர்த்து தொடக்கத்தில் இருந்து நான் போராடி வருகிறேன். தான் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என 1997-ல் எதிர்ப்பு மனு தாக்கல் செய்தேன். 2010 செப்டம்பர் 28-ல் ஆலை மூடுவதற்கு என்னுடைய எதிர்ப்பு மனு அனுமதிக்கப்பட்டது. பின்னர் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை நாடி தடை ஆணை பெற்று மீண்டும் வழக்கு நடைபெற்றது. இதற்கிடையில் 2013 மார்ச் 23-ம் தேதி நச்சுப்புகை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறியதால் மக்கள் பாதிக்கப்பட்டனர், இதனால் பெரும் போராட்டம் வெடித்தது. இதனை தொடர்ந்து 29-ம் தேதி அரசு ஆலையை மூட உத்தரவிட்டது.

ஏப்ரல் 2-ம் தேதி உச்சநீதிமன்றம் ஆலையை திறப்பதற்கு உத்தரவு பிறப்பித்தது. பின்னர் பசுமை தீர்ப்பாயத்திலும் தன்னை ஒரு தரப்பினராக சேர்க்க வேண்டும் என்று பெட்டிஷன் அளித்திருந்தேன். மீண்டும் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலும் பசுமை தீர்ப்பாயம் ஆலைய திறக்கலாம் என உத்தரவு பிறப்பித்த நிலையில் அதனை எதிர்த்து 2 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தேன். இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வழக்கு 20-ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் தங்களை சேர்க்க கோரிய தனது மனு ஏற்க்கப்பட்டுள்ளது.

வைகோ புகார்;

அரசு ஸ்டெர்லைட்டை எதிர்க்கவிலை என வைகோ புகார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசும் மாசு கட்டுப்பாடு வாரியமும் தொடக்கத்தில் இருந்தே ஆலைக்கு ஆதரவாக செயல்படுகின்றன. எனவே அரசின் ஏற்பாட்டில் தான் இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பயங்கரமான புரட்சி வெடித்த பிறகு அரசு தன் நிலையை மாற்றிக்கொண்டது.

 ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு;

இதனை தொடர்ந்து தற்போது அதே வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து இன்றைக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக இருந்தது. ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 23-ம் தேதி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் 23 -ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் மாணவர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் என அனைவரும் பங்கேற்று ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்ப்பு தெரிவிப்பதாக பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: