2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கேலி செய்யும் விதமாக பாகிஸ்தான் ஊடகம் விளம்பரம்

டெல்லி: பாகிஸ்தான் நாட்டிடம் சிக்கிய இந்திய விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்யும் விதமாக அந்நாட்டு ஊடகம் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் எல்லைப் பகுதியான பாலகோட்டுக்குச் சென்று தீவிரவாத முகாமின் மீது பிப்ரவரி 26-ம் தேதி இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்திய விமானப் படையின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் விமானம் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது. பாகிஸ்தான் விமானத்தின்மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் நாட்டு ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார். அப்போது, அபிநந்தன் கைது செய்யப்பட்டிப்பதை உறுதிப்படுத்தும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

அந்த வீடியோவில் அபிநந்தன் டீ குடித்துக் கொண்டே பேசுவார். அப்போது, ராணுவ விமானம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் எழுப்பிய கேள்விகளுக்கு, ’மன்னிக்கவும். அதுகுறித்து நான் கூற முடியாது(Am sorry. I not supposed to tell this)என்று பதிலளிப்பார். பின்னர், டீ எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, நன்றாக இருக்கிறது என்று பதிலளிப்பார். மேலும், இந்திய அளவில் அபிநந்தனின் முறுக்கு மீசை மிகவும் பிரபலமானது. இதற்கிடையே, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கு இடையை ஜூன் 16-ம் தேதி உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது.

 அந்தப் போட்டியை பாகிஸ்தானின் ஜாஸ் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு அந்த தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பர வீடியோவில், ‘ இந்திய கிரிக்கெட் அணி போன்ற உடையணிந்த, அபிநந்தன் போல முறுக்கு மீசை உடைய ஒருவர் டீ குடித்துக் கொண்டே ’Am sorry. I not supposed to tell this’ என்று திரும்ப திரும்ப பேசுவார். பின்னர், டீ நன்றாக இருக்கிறது’ என்று கூறுவார். எழுந்த அந்த நடிகரை, டீ கப்பை(உலகக் கோப்பையை குறிப்பிடும் விதமாக) வைத்துவிட்டு செல்லுமாறு ஒருவர் கூறுவார். அபிநந்தனை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் பெறும் சர்ச்சையை ஏற்பட்டுள்ளது.

Related Stories: