ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், பிரிஸ்டல் கவுன்டி கிளப் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் மோதுகின்றன. கருணரத்னே தலைமயிலான இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. அடுத்து ஆப்கானிஸ்தானுடன் நடந்த போட்டியில் டி/எல் விதிப்படி 34 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. பாகிஸ்தான் - இலங்கை அணிகளிடையே பிரிஸ்டல் மைதானத்தில் நடக்க இருந்த லீக் ஆட்டம், கனமழை காரணமாக கைவிடப்பட்டதை அடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இலங்கை அணி 3 போட்டியில் 3 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், வங்கதேச அணி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று பின்தங்கியுள்ளது. இந்த நிலையில், இன்றைய போட்டியில் வென்று புள்ளிப் பட்டியலில் முன்னேறும் முனைப்புடன் இரு அணிகளும் வரிந்துகட்டுகின்றன.