நிபா வைரசை தடுக்க உஷார் நடவடிக்கை: கோவா அரசு அறிவிப்பு

பனாஜி: நிபா வைரசை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கோவா சுகாதார அமைச்ர் விஷ்வஜித் ரானே கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நிபா வைரஸ் கேரளாவில் தாக்கியுள்ளது. ஆனால், கோவா மாநிலத்துக்கு இந்த வைரசால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதனால், மக்கள் பயப்பட வேண்டாம். நிபா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்வது குறித்து மருத்துவ அதிகாரிகள், உயர் மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் மக்கள் உடனடியாக மருந்துவர்களிடம் சென்று சிகிச்சை பெறவும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: