போலீசார் ஹெல்மெட் அணியாவிடில் வழக்கு : ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு

சென்னை: சென்னையில் காவல்துறையினர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். ஹெல்மெட் அணியாத போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து விதிகளை போலீசார் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஆணையர் விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.

உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஹெல்மெட் சோதனையை போக்குவரத்து போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும் பொதுமக்கள் பலரும் ஹெல்மெட் அணியாமல் பயணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு முறையாக அமலபடுத்தவில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாக ஹெல்மெட் அணியாதவர்கள் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனவும், ஏன் வாகனத்தை பறிமுதல் செய்யகூடாது எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: