திருச்சியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகள் அழிப்பு: போலீசார் தீவிர விசாரணை

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களின் பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ‘மும்மொழி கொள்கை என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய் மொழி,  ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும். இந்தி பேசும்  மாநிலங்களில், ஆங்கிலத்துடன், இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை  கற்க வேண்டும். இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இந்த திட்டத்துக்கு தமிழகம் உட்பட  தென்  மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே, திருச்சி விமான நிலையம் செல்ல வழிகாட்டும் பெயர் பலகை, பி.எஸ்.என்.எல். அலுவலகம்,  ரயில் நிலையம் மற்றும் தலைமைத் தபால் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை அடையாளம் தெரியாத நபர்கள் அழித்துள்ளனர். அஞ்சல் அலுவலகம், ஆகிய அரசு அலுவலகங்களில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்து இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தபால் பெட்டிகளிலும் இந்தி எழுத்துகள் மீது கருப்பு மை பூசப்பட்டு இருந்தது. கருப்பு மை பூசி அந்த எழுத்துகள் அழிக்கப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இரவோடு ,இரவாக மர்மநபர்கள் செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: