செங்கோட்டையன் பேட்டி 7,000 பள்ளிகளில்ஸ்மார்ட் வகுப்பறை

கோபி: கோபிசெட்டிப்பாளையத்தில் ஆய்வுக்குப்பின் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு நடத்தும் ஆலோசனை கூட்டம் என்பது கொள்கை முடிவு இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு என்ன தேவை என்பது குறித்த ஆலோசனை கூட்டம்தான். தமிழகத்தில் 6 முதல் 8 வரையுள்ள 7 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வரப்படும். இனி தகுதித்தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு ஓஎம்ஆர் தாள் ஆய்வு இருக்காது. ஆன்லைன் மூலமாக பதிவு செய்து தேர்வு செய்யப்படும். ஒரே வார காலத்தில் முடிவு வெளியிடப்படும். இனி வரும் காலங்களில் 40 நாட்களுக்குள் ஆசிரியர் தேர்வு நடத்தி முடிக்கப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: