கத்தாரில் இருந்து வங்கதேச பிரதமரை அழைத்து வர பாஸ்போர்ட் இன்றி பறந்த விமானி

தாகா: வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்ட வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவை அழைத்து வர சிறப்பு விமானத்தில் புறப்பட்ட பைலட், பாஸ்போர்ட் இல்லாமல் கத்தார் விமான நிலையத்தில் சிக்கினார். இதனால், ஷேக் ஹசினாவை அழைத்து வர மாற்று பைலட் அனுப்பப்பட்டார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, ஜப்பான், சவுதி அரேபியா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இவர் இன்று நாடு திரும்ப வேண்டும். இவரை அழைத்து வருவதற்காக, ‘பிமான் பங்களாதேஷ் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் பைலட் கேப்டன் பசல் முகமது, சிறப்பு போயிங் விமானத்தில் தாகாவில் இருந்து கத்தார் சென்றார்.

தோகா சர்வதேச விமானத்தில் குடியுரிமை அதிகாரிஅவரது பாஸ்போர்ட்டை கேட்டுள்ளார். அவர் பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்ல மறந்து விட்டார். அதனால், அவர் தோகாவில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, அவரது பாஸ்போர்ட்டை பிமான் விமான நிறுவனம் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைத்தது. ஷேக் ஹசீனாவை அழைத்து வர மாற்று பைலட்டையும் விமான நிறுவனம் அனுப்பியது. பைலட் பாஸ்போர்ட் இல்லாமல் சென்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என வங்கதேச உள்துறை அமைச்சர் ஆசாத் துசாமான் கான் கூறியுள்ளார்.

Related Stories: