மதுசூதனன்- ஓபிஎஸ் சந்திப்பு

சென்னை: அ.தி.மு.க. அவை தலைவர் மதுசூதனன், கடந்த மே 3ம் தேதி, திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு, கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு, கடந்த இரு வாரங்களுக்கு முன் வீடு திரும்பினார். அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர்,  வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள மதுசூதனன் வீட்டிற்கு வந்தனர். அவரிடம் நலம் விசாரித்து, அரை மணி நேரம் பேசினர். பின்னர், மாலை 5.15 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர். ஓ.பி.எஸ். திடீர் வருகையால், அப்பகுதியில் அதிமுகவினர் கூடினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மதுசூதனன் வீட்டிற்கு திடீரென ஓபிஎஸ் வந்தது அரசியல் பிரச்னை காரணமா அல்லது நலம் விசாரிக்க வந்தாரா என்று அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: