சிக்னல் கிடைக்காத போனை விற்ற செல்போன் நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சிக்னல் கிடைக்காத செல்போனை விற்பனை செய்த நிறுவனத்துக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பூரை சேர்ந்தவர் வடிவேல். கடந்த 2016ம் ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.20 ஆயிரத்து 99 கொடுத்து செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த செல்போன் வாங்கிய நாள் முதல் சில கோளாறுகள் ஏற்பட்டு வந்துள்ளது. முக்கியமாக நெட்வர்க் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் வடிவேல் அவதி அடைந்து வந்துள்ளார். மேலும் தொடுதிரையும் சரியாக வேலை செய்யவில்லை. இதுபற்றி சர்வீஸ் சென்டரில் பலமுறை புகார் அளித்தும் சரி செய்ய முடியவில்லை.

 

வடிவேல் வக்கீல் என்பதால் தொழில் சம்பந்தமாக யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் அவதியடைந்து வந்துள்ளார். இந்த நிலையில் செல்போன் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கோரி சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி லக்‌ஷ்மிகாந்தம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி செல்போன் வாங்கி மனுதாரர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதை உறுதி செய்தார். இதனால் செல்போன் நிறுவனம் மனுதாரர் வடிவேலுக்கு செல்போனின் விலை ரூ.20 ஆயிரத்து 99 மற்றும் இழப்பீடு, மன உளைச்சலுக்கு சேர்த்து ரூ.15 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

Related Stories: