நவீன் பட்நாயக், ஜெகன்மோகனுக்கு எடப்பாடி வாழ்த்து

சென்னை: முதல்வராக பதவியேற்றுள்ள நவீன் பட்நாயக், ஜெகன்மோகனுக்கு் முதல்வர் எடப்பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு எழுதியுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ஒடிசா முதல்வராக 5வது முறையாக பதவியேற்றதற்காக தமிழகத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய தலைமைத்துவத்தின் கீழ், ஒடிசாவின் வளர்ச்சி மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். ” என்று தெரிவித்துள்ளார். இதேபோல முதல்வர் எடப்பாடி, ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு அனுப்பியுள்ள வாழ்த்தில், “தமிழகத்தின் சார்பாகவும், எனது தனிப்பட்ட முறையிலும் ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றதில் நான் உங்களை மனதார வாழ்த்துகிறேன். ஆந்திராவின் மக்களுக்கு சேவை செய்வதில் உங்கள் தந்தையின் வழிநடத்துதலை நீங்கள் பின்பற்றுவீர்கள் என நம்புகிறேன்.

Related Stories: