புளியங்குடி வனப்பகுதியில் 3வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ

புளியங்குடி: நெல்லை மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்தில் சோமரந்தான், டி.என்.புதுக்குடி, புளியங்குடி, கோட்டமலை, செல்லுப்புளி, வாசுதேவநல்லூர், நாரணபுரம், தெற்கு மற்றும் வடக்கு தலையணை ஆகிய 9 பீட்கள் உள்ளன. இங்கு வன உயிரினங்கள் ஏராளமாக உள்ளன.  கடந்த 25ம் தேதி மாலை 3 மணியளவில் புளியங்குடி வனச்சரகம் செல்லுப்புளி பீட் பகுதியில் மின்னல் தாக்கியது. இதில் பாறைகளில் வெடிப்பு உண்டாகி தீப்பொறி ஏற்பட்டு தீ பரவியது. இதேபோல் கோடை வெப்பம் காரணமாக காய்ந்து காணப்பட்ட மூங்கில் மரங்களில் தீப்பற்றி பரவியது. இதில் மூங்கில் மற்றும் ஈத்தல், காய்ந்த மரங்கள், புற்கள் போன்றவை கொழுந்துவிட்டு எரிகிறது. தகவலறிந்து புளியங்குடி வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காட்டுத்தீயை தடுக்க எதிர் தீ மூட்டியும், குழிகள் வெட்டியும், மரக்கிளைகளை கொண்டு தீயை தடுத்தும் அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற

னர். செல்லுப்புளி பீட்டை தொடர்ந்து புளியங்குடி கோட்டைமலை பீட்டிற்கும் காட்டுத்தீ பரவியது. இதனால் தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் அவர்கள் திணறி வருகின்றனர்.

Related Stories: