அடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் புதுகை ரயில் நிலையம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும் இருப்பதால் பயணிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும் 24 மணி நேரமும் ரயில் நிலையம் பகுதியில் நாய்கள் சுற்றி திரிவதால் பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர். புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு சென்னை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ், கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் என பல அதிவிரைவு, சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள் என 24 மணி நேரமும் வந்து செல்கின்றன. இதில் உள்ளூர் பயணிகள், வெளியூர் பயணிகள், வெளிநாட்டினர் என தினசரி புதுக்கோட்டை ரயில் பணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதபோல் சரக்கு ரயில்களும் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. குறிப்பாக ராமேஸ்வரம், சென்னை, திருச்சி, காரைக்குடிக்கு அதிக அளவில் பயணிகள் வந்து செல்கின்றனர். புதுக்கோட்டையில் பழமையான ஓவியங்களான சித்தன்னவாசல் கலை ஓவியம், திருமயம் கோட்டை, தமிழகத்தின் இரண்டாவது மியூசியம் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் ரயில் நிலையம் வந்து செல்கின்றனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் பலர் காரைக்குடி, திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களும் காலை மாலையில் ரயில் பயணத்தை மேற்கொள்ள புதுக்கோட்டை ரயில் நிலையம் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்லும் புதுகை ரயில் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கேட்பாரற்று கிடக்கிறது. குறிப்பாக கழிப்பறை வசதிகள் ஏதும் இல்லை. அங்கு இருக்கும் கழிப்பறையில் தண்ணீர் வசதியின்றி கிடக்கிறது. இதனை யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில பயணிகள் வேறு வழியின்றி திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் பெண் பயணிகள் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். மேலும் அங்கு இயங்கிய கேன்டின் தற்போது செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பணிகள் பசிக்கு ஏதும் வாங்கி சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரயில் நிலையம் வெளியிலும் எந்த ஓட்டலும் இல்லை. தண்ணீர் வசதி ஏதுமில்லை. குடிநீர் பெற புதுக்கோட்டை நகர் பகுதிக்குதான் வர வேண்டும். பல இடங்களில் தண்ணீர் பைப்புகள் இருக்கிறது. ஆனால் பைப்புகளில் தண்ணீர் வருவதில்லை. குறிப்பாக புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் நாய்கள் சுற்றி திரிகிறது. இதனால் ரயில் பயணிகள் அச்சத்துடன் ரயிலுக்காக காத்திருக்கின்றனர். மேலும் காத்திருப்போர் அரையும் பூட்டியே கிடக்கிறது. இதனால் வெட்ட வெளியில் பயணிகள் காத்துகிடக்கின்றனர்.

தற்போது வெயில் வாட்டி எடுத்து வருகிறது. காத்திருப்போர் அரையில்லாததால் பயணிகள் வெயில் கொடுமையை தாங்கிக்கொண்டு காத்து கிடக்கின்றனர். புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் நாய்கள் சுற்றிதிரியும் பகுதிகளாக காணப்படுகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடன் பாதுகாப்பற்ற முறையில் பயணித்து வருகின்றனர். இதனை விரைந்து சரிசெய்ய வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ரயில் பணிகள் கூறியதாவது: புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு பயணிகள் வந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர். ஆனால் பயணிகளுக்கு எந்தவித அடிப்படை சவதிகளும் இல்லை. குடிதண்ணீர், கழிப்பறை வசதிகள், காத்திருப்போர் அரை, கேட்டின் உள்ளிட்ட வசதிகள் இல்லாதததால் நாங்கள் மிகுந்த அவஸ்தை அடைந்து வருகிறோம். மேலும் குழந்தைகளுக்கு பசி ஏற்படும்போது எதுவும் வாங்கி கொடுக்க முடியாமல் தவியாய் தவிக்கிறோம். குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. வெயிலில் காத்திருந்து ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டைக்கு பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அவர்கள் புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு ஒரு முறை வந்து சென்ற பிறகு ரயில் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். எந்தவித பாதுகாப்பும் இல்லை. நாய்கள் நிலையம் போல் பல நாய்கள் குறைத்துகொண்டு சுற்றி வருகிறது. இதனால் நாயகள் பயணிகளை கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் நாங்கள் பயணிக்கிறோம். சிலர் இரவு நேரங்களில் குடித்துவிட்டு மதுபாட்டில்களை ரயில் நிலையம் பகுதியில் வீசி செல்கின்றனர். பல இடங்களில் ரயில் நிலையத்தின் சுற்றுசுவர் இடிந்து நாசமாகி கிடக்கிறது. இதனை கண்டு கொண்டுதாக தெரியவில்லை. இதனை பார்க்கும் ரயில் பணிகள், சுற்றுலை பயணிகள் ரயில் நிலையம்போல் இல்லாமல் பார்போல் இருக்கிறது என்று கேலி செய்கின்றனர். எனவே இதனை ரயில்வே நிர்வாகம் விரைந்து சரி செய்ய வேண்டும் என்றனர்.

குழந்தைகளுக்கு பசி ஏற்படும்போது தின்பண்டங்கள் ஏதும் வாங்கி கொடுக்க முடியாமல் தவியாய் தவிக்கிறோம். குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. வெயிலில் காத்திருந்து ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் ஒருமுறை வந்து சென்ற பிறகு ரயில் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். எந்தவித பாதுகாப்பும் இல்லை.

Related Stories: