குன்னூரில் பழக்கண்காட்சியை 30 ஆயிரம் பேர் கண்டு ரசிப்பு

குன்னூர்:  நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கோடைவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக 61வது பழக்கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. 2 நாள் நடந்த கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. கண்காட்சியின் சிறப்பம்சமாக 1.50 டன்  பழங்களை கொண்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. மேலும் பழ விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் மாட்டுவண்டி, கூடையில் பழங்கள் விற்கும் தம்பதிகளின் உருவங்கள் பழங்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. இவை  சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. முதல் நாளில் 13,000 பேரும், நேற்று 17,000 பேரும் கண்டு ரசித்தனர்.

Related Stories: