ஜிபிஎஸ் போன்ற நவீன உபகரணங்களுடன் கர்நாடக நக்சல் தடுப்பு பிரிவு தமிழக எல்லையில் ரோந்து

சத்தியமங்கலம்: பைனாகுலர், ஜிபிஎஸ் போன்ற நவீன உபகரணங்களுடன் தமிழக எல்லையில்  கர்நாடக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.கர்நாடக மாநில நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தமிழக-கர்நாடக எல்லையான தாளவாடி, பந்திப்பூர், முதுமலை, முத்தங்கா ஆகிய வனப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக நக்சல் தடுப்பு பிரிவை சேர்ந்த 12 பேர் கொண்ட தனிப்படை தமிழக கர்நாடக மாநில எல்லையில் முகாமிட்டுள்ளனர். மாடுமேய்க்கும் பழங்குடியினர், வனத்தையொட்டியுள்ள விவசாயிகளிடம் புதிய நபர் நடமாட்டம் குறித்தும், சந்தேகப்படும்படி சுற்றித்திரியும் நபர்கள் பற்றியும் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அடர்ந்த வனப்பகுதியில் உயரமான பாறை மற்றும் மலை முகடுகளில் முகாமிட்டு பைனாகுலர், ஜிபிஎஸ் போன்ற நவீன உபகரணங்களுடன், சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இரு மாநில எல்லையில் 15 இடங்களில் தானியங்கி கேமரா வைத்துள்ளனர். இரு மாநில சோதனைச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களை கேமரா மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் பதிவாகும் புகைப்படங்களை வைத்து புதிய நபர் வருகை குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: