டெல்லியில் பிரதமர் மோடி- ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு: பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை ஒய்.எஸ்.ஆர். தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார். ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 150 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கட்சி 24 இடங்களிலும், ஜனசேனா கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றது.  பெரும்பான்மை வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ளார். ஜெகன் மோகன் வரும் 30ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், ஆந்திரா முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து இன்று தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி,  மே 30-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பங்கேற்கவும் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories: