கத்திரி முடிய இன்னும் 5 நாள் வேலூர், திருத்தணியில் 109 டிகிரி

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் குறைந்துள்ள நிலையில், வேலூர், திருத்தணி ஆகிய இடங்களில் நேற்று 109 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில், வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அக்னி வெயில் என்னும் கத்திரி வெயில் காலம் முடிய இன்னும் 5 நாட்கள் உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் பல்வேறு இடங்களில் குறைய தொடங்கியுள்ளது. இதற்கிடையே, பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நேற்று கூடலூரில் 30 மிமீ மழை பெய்துள்ளது. பெரியாறு, குழித்துறை, பேச்சிப்பாறை, தேனி, நீலகிரி, திருச்செங்கோடு, நடுவட்டம் 20 மிமீ, பெரியகுளம், கரூர், வால்பாறை 10 மிமீ மழை பெய்துள்ளது.

இருப்பினும், பெரும்பாலான இடங்களில் வெயில்தான் நிலவியது. அதில் அதிகபட்சமாக வேலூர், திருத்தணி ஆகிய இடங்களில் 109 டிகிரி வெயில் கொளுத்தியது. கரூர் 106 டிகிரி, திருச்சி, சேலம் 104 டிகிரி, மதுரை, தர்மபுரி 102 டிகிரியாக இருந்தது. சென்னையில் வெயில் 100 டிகிரிக்கு கீழ் தான் நேற்று காணப்பட்டது. இந்நிலையில், தெலங்கானா மற்றும் அதை ஒட்டிய பகுதியில் வெயிலின் தாக்கம் தற்ேபாது அதிகமாகவே நீடிக்கிறது. இதன் காரணமாக அங்கு வெப்ப காற்றும் வீசி வருகிறது. இதன் தாக்கமாக தமிழகத்திலும் சில இடங்களில் வெப்ப காற்று வீசும் நிலை உள்ளது. எனவே, அதிகரிக்கும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 28ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.

Related Stories: