வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி: கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்ற பாடுபடுவேன்.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பேட்டி

சென்னை: தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக முன்னாள் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் 5,64,872 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெ. ஜெயவர்தன் 3,02,649 வாக்குகள் பெற்றுள்ளார். ம.நீ.ம சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 1,35,465 வாக்குகளும், நா.தா.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 50,222 வாக்குகளும், அமமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 29,522 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து அவருக்கு தேர்தல் ஆணையத்தில் இருந்து வழங்கப்பட்ட சான்றிதழை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தமிழக மக்கள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், அவருடைய அயராது உழைப்பிற்கும், அவருடைய கொள்கைக்கு தந்த பேராதரவில் அந்த வெற்றியின் நெகிழ்வில் அந்த வெற்றியை சர்ப்பணம் செய்வதற்காக திமுக தலைவர் அவர்கள் கூறியது போல தலைவர் அவர்களின் கலைஞர் அவர்களின் பாதத்தில் வைத்து ஆசி பெற்று செல்ல வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். தென் சென்னை தொகுதி மக்கள் திமுக மீதும், தலைவர் ஸ்டாலின் மீதும், என்னுடைய வாக்குறுதிகள் மீதும், மிகப்பெரிய நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். என்றைக்கும் திமுக அவர்களுக்காக நிற்கும். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற பாடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

எம்.பி-யான 5 எழுத்தாளர்கள்;

நாடாளுமன்றம் முழுவதும் தமிழக மக்களின் உரிமைக்கான குரல்களுக்காக ஒலிக்கும், எழுத்தாளர்கள் அனைவரும் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொல்லாமல், தார்மிக ரீதியாக தாங்கள் கொண்ட கொள்கைக்கு குறிப்பாக திமுக மற்றும் அதனுடைய கூட்டணி சார்ந்த கட்சிகளின் கொள்கைக்கும், தமிழக மக்களுடைய நலனுக்கும், உரிமைக்கும் மிக சரியாக குரல் கொடுப்பார்கள். எழுத்திலே இதிகாரம் பதிய வைத்ததை நாடாளுமன்றத்தில் கூடுதல் அழுத்தத்துடன் உரிமையோடு குரல் கொடுப்பார்கள்.

Related Stories: