வீடுகள், சிறு வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் காப்பீடு வசதி: காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை

புதுடெல்லி: பேரிடர் பாதிப்புக்கு ஆளாகும் பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு குறைந்த விலையில் காப்பீடு வசதி கொண்டு வர காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக சொந்த வீடு வைத்திருப்பவர்கள், வர்த்தகர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. வீடு வைத்துள்ள பெரும்பாலானோர் தாங்கள் வாங்கிய விலைக்கு காப்பீடு செய்கின்றனர்.

ஆனால், இதற்கான பிரீமியம் தொகை மிக அதிகமாக உள்ளது. காப்பீடு செய்யாதவர்களுக்கு கடுமையான நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அனைவருக்கும் காப்பீடு வசதி கிடைக்கும் வகையில் குறைந்த பிரீமியத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டங்களை கொண்டுவர வேண்டும் என இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதுபோல் சிறு வணிகர்கள், பெரிய நிறுவனங்களுக்கு ரூ.5 கோடி மற்றும் ரூ.50 கோடி மற்றும் அதற்கு மேல் என நிறுவனத்துக்கு ஏற்ப பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

அடுக்குமாடி பொறுத்தவரை மாநில அரசு நிர்ணயித்த மதிப்பின் அடிப்படையில் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த வேண்டும் என காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. வெள்ளம் காரணமாக சென்னை மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.  இதுபோல், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. புயல் காரணமாகவும் பாதிப்பு ஏற்பட்டது. பாலின் புயல், பானி புயல் காரணமாக கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது.

உதாரணமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் ரூ.6,600 கோடி, பாலின் புயலால் ரூ.,800 கோடி, ஹூத் ஹூத் புயல் காரணமாக ரூ.65,000 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டது.  இவற்றில் காப்பீட்டு இழப்பாக உத்தரகாண்ட்டில் ரூ.,000 கோடி, பாலின் புயலால் ரூ.600 கோடி,  ஹூத் ஹூத் புயலால் ரூ.4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட பொருளாதார மற்றும் காப்பீட்டு இடைவெளி கருத்தில் கொண்டு புதிய நடைமுறை செயல்படுத்த வேண்டியுள்ளது என காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: