5ஜி சேவையை நடைமுறைப்படுத்தியது சீனா: 10 ஆயிரம் டவர்களை அமைக்க இலக்கு

சீனா: சீனாவில் 5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை செல்போன் சேவையை நடைமுறைப்படுத்தும் வகையில், வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டுள்ளதாக  சீன தொலைதொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச அளவில் 5ஜி சேவையை முதன் முதலாக சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஷாங்காய் நகரில் 5ஜி சேவைக்கான டவர்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் டவர்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை முழுமையாக கிடைக்கும் வகையில் சீன தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில், 5ஜி சேவையை வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையிலான செயல்முறை விளக்கங்கள், முன்னோட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

Related Stories: