சீனாவில் பாரம்பரிய டிராகன் படகு திருவிழாவையொட்டி படகுப் போட்டிகள் கோலாகலம்

சீனா: சீனாவில் பாரம்பரிய டிராகன் படகு திருவிழாவையொட்டி படகுப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றன. கிழக்கு சீனாவின் ஜியாங்சூ மாகாணத்திலுள்ள, யான்செங் நகரில், நடைபெற்ற லோங்சூ டிராகன் படகு போட்டியில், 55 குழுவினர் பங்கேற்றனர். வழக்கமாக நடைபெறும், 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 500 மீட்டர் தூரங்களை இலக்காக கொண்ட போட்டிகளுடன் இவ்வாண்டு, 1000 மீட்டர் தூரம் இலக்கு கொண்ட போட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertising
Advertising

ஆண்கள், பெண்கள் என தனித்தனியே நடைபெற்ற போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்ட போட்டியாளர்கள், போட்டி தூரத்தை தொட்டுவிட ஆவேசமாக படகை செலுத்தினர். இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். சீனாவின் பல்வேறு நகரங்களில் 8 கட்டங்களாக நடைபெறும் போட்டியில், அதிக புள்ளிகளை பெறும் அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படவுள்ளது.

Related Stories: