ராசிபுரம் குழந்தைகள் விற்பனை தொடர்பாக மேலும் பெண் இடைத்தரகர் ஒருவர் கைது; மே 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

நாமக்கல்: ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் இடைத்தரகரை பெங்களூருவில் போலீஸ் கைது செய்துள்ளது. குழந்தை விற்பனை தொடர்பாக செவிலியர் அமுதவள்ளி உள்பட ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண் இடைத்தரகர் ரேகாவை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீஸ் அழைத்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை சம்பவம் சமீபத்தில் அம்பலமானது.

Advertising
Advertising

நாமக்கல்: தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில் குழந்தைகளை விற்பனை செய்து வந்த, ராசிபுரத்தை சேர்ந்த நர்ஸ் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், கொல்லிமலை மற்றும் பள்ளிபாளையத்தை சேர்ந்த 18 பச்சிளம் குழந்தைகள், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும், பல ஊர்களில் புரோக்கர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. வறுமையில் உள்ள பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை, குறைந்த விலைக்கு வாங்கி, குழந்தை இல்லாமல் ஏங்கும் வசதி படைத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

பெண் புரோக்கர்களாக செயல்பட்ட ஈரோட்டை சேர்ந்த பெண்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணை அதிகாரியாக சேலம் சிபிசிஐடி டிஎஸ்பி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளர். சேலம் இன்ஸ்பெக்டர் சாரதா, நாமக்கல் இன்ஸ்பெக்டர் பிருந்தா ஆகியோரும் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் ராசிபுரம் குழந்தை விற்பனை தொடர்பாக மேலும் ஒரு பெண் இடைத்தரகரை பெங்களூருவில் போலீஸ் கைது செய்துள்ளது.

மே 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான பெண் இடைத்தரகர் ரேகாவுக்கு மே 31 வரை நீதிமன்றக் காவல் விதித்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

260 குழந்தைகள் மாயம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தை விற்பனை சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் 260 குழந்தைகள் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 206 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டார்களா? அல்லது வேறு ஊருக்கு குடிபெயர்ந்தார்களா? என்பது பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: