‘உங்க சங்காத்தமே வேண்டாம் சிலைய நாங்களே வச்சுக்கிறோம்’

கொல்கத்தாவில் கலவரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலையை மீண்டும் கட்டமைப்பதற்கு பாஜவின் பணம் தேவையில்லை என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் வன்முறையின்போது உடைக்கப்பட்ட தத்துவமேதை வித்யாசாகர் சிலையை அதே இடத்தில் நிறுவப்படும் என பிரதமர் மோடி நேற்று உபி.யில் நடந்த பிரசாரத்தின்போது தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, “கொல்கத்தாவில் மீண்டும் வித்யாசாகர் சிலையை கட்டமைத்து தருவதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். எங்களுக்கு பாஜவின் பணம் எதற்கு? மேற்கு வங்கத்திடமே போதுமான வளம் இருக்கிறத. சிலைகளை சேதப்படுத்துவது பாஜவின் பழக்கமாகும். அவர்கள் திரிபுராவிலும் இதைத்தான் செய்தார்கள். பாஜ மேற்குவங்கத்தின் 200 ஆண்டு பாரம்பரியத்தை சிதைத்துள்ளது. இதுபோன்ற கட்சியை ஆதரிப்பவர்களை சமூகம் ஏற்காது. சமூக வலைதளங்களில் போலியாக செய்திகளை பரப்பி பாஜ வன்முறையை ஏற்படுத்த முயற்சிக்கிறது” என்றார்.

Related Stories: