பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடை மே 30ம் தேதி வரை நீட்டிப்பு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடை மே 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில்  ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பினர் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக  பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பிப்ரவரி மாதம் 26ம் தேதி இந்திய விமானப்படை  விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பால்கோட்டில் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின.

Advertising
Advertising

இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் வான்பரப்பில் விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்தது. பின்னர் மார்ச் 27ம் தேதி இந்தியாவை தவிர மற்ற நாடுகளுக்கு விமானங்களை இயக்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது. இந்திய விமானங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மே 30ம் தேதி வரை நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய அரசு அமைந்து பிறகே பாகிஸ்தான் அரசு இது குறித்து முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

Related Stories: