பெண் பைலட் பாலியல் புகார்

புதுடெல்லி:  ஏர் இந்தியா விமானி மீது சக பெண் விமானி பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த 5ம் தேதி ஐதராபாத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பெண் பைலட் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு மூத்த கமாண்டர் ஒருவர் பயிற்சி அளித்தார். இந்நிலையில், பயிற்சி கொடுத்த கமாண்டர் மீது பெண் பைலட் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரில், ‘கமாண்டர் என்னிடம் கணவர் குறித்தும், பாலியல் உறவு குறித்தும் தகாத வகையில் பேசினார். சிறிது நேரத்தில் நான் இதுபோன்று பேச வேண்டாம் என்றும், நான் செல்வதற்காக வாகனத்தை அழைக்கும்படியும் கூறினேன். ஆனால், வண்டிக்காக காத்திருந்த அரைமணி நேரமும் அவரது நடத்தை சரியில்லை. இவரது நடவடிக்கையால் நான் அதிர்ச்சி அடைந்தேன்,’ என்று கூறியுள்ளார். பெண் விமானி கொடுத்த பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் எங்களுக்கு தெரிய வந்தவுடன் உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்,” என்றார்.

Related Stories: