விருதுநகரில் ரயில் பாதையை அபாயகரமான முறையில் கடக்கும் பொதுமக்கள்

விருதுநகர்: விருதுநகரில் ரயில் பாதையை அபாயகரமான முறையில் கடக்கும் பொதுமக்களால் விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தடுப்பு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகரில் ராமமூர்த்தி ரோடு ரயில்வே மேம்பாலம் கடந்த 38 மாதங்களாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இப்பாலத்தின் மேல்பகுதி பணிகள் நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் கோரிக்கைகளை தொடர்ந்து, மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

பாலத்தின் கீழ்பகுதியில் தரைத்தளம் மற்றும் பக்கவாட்டுச் சாலைகள், மேம்பாலம், தரைப்பகுதியில் மின்விளக்குகள் பொருத்தும் பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தூண்கள் வழியாக பொதுமக்கள் ரயில்வே பாதையை இரவு மற்றும் பகல் நேரங்களில் கடந்த வருகின்றனர். தினசரி 80க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வரும் நிலையில், ரயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பற்ற சூழலில் தண்டவாளத்தை கடக்கின்றனர். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மேம்பாலத்திற்கு கீழ்பகுதியில் தூண்களுக்கு இடையே உள்ள இடங்களை முழுமையாக சுவர் எழுப்பி தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: