‘வாக்கரூ’ விளம்பர தூதராக நடிகர் அமீர்கான் நியமனம்

கோவை: யூ4ஐசி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ‘வாக்கரூ’ பிராண்ட் காலணி விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நியமிக்கப்பட்டுள்ளார். யூ4ஐசி இன்டர்நேஷனல் நிறுவனம், விகேசி மற்றும் ‘வாக்கரூ’ பிராண்டுகளில் காலணிகளை தயாரிக்கிறது. இதில் வாக்கரூ பிராண்ட் காலனிகளை விளம்பரப்படுத்தும் வகையில் ‘பீ ரெஸ்ட்லெஸ்’ என்ற புதிய பிரசாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமீர்கான் நடித்த விளம்பர படத்தையும், வாக்கரூ பிராண்ட் புதிய காலணிகளையும் வாக்கரூ நிர்வாக இயக்குநர் வி.கே.சி.நவுசாத் அறிமுகம் செய்தார்.

 அவர் கூறுகையில், ‘வாக்கரூ பிராண்டின் ‘பீ ரெஸ்ட்லெஸ்’ பிரசாரம் இளம் தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விளம்பர தூதராக நடிகர் அமீர்கான் நியமிக்கப்பட்டுள்ளார். வாக்கரூ காலணிகள் 2013ல் சந்தைப்படுத்தப்பட்டது. மக்கள் வரவேற்பால் இந்தியாவின் 2வது பெரிய பிராண்டாக உள்ளது. கடந்த ஆண்டில் ₹480 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. இது நடப்பு ஆண்டில் ₹1,000 கோடியாக உயரும் என எதிர்பார்க்கிறோம் என்றார். நிகழ்ச்சியில் வாக்கரூ இயக்குநர்கள் ராஜேஷ் குரியன், முஸ்தபா யாசின், மனோஜ் பாஸ்தியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: