குட்கா முறைகேடு விவகாரம்: தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை

சென்னை: குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ கடந்த 8-ம் தேதி விசாரணை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக விசாரணையானது தேர்தலுக்கு பிறகு மிகவும் மந்தமாக சென்றிருந்தது. விசாரணை அதிகாரியும் அதிரடியாக மாற்றப்பட்டு தற்போது தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் இந்த தடை அமலில் இருந்து வருகிறது. ஆனால் தடையை மீறி சென்னையில் குட்கா விற்பனை நடப்பதாக புகார்கள் எழுந்தன.

குறிப்பாக இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மட்டுமல்லாது, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், மற்றும் பி.வி.ரமணா உள்ளிட்டோரும் அவரது உதவியாளரும் என அனைவருடன் விசாரணையாது தீவிரமாக நடைபெற்றது. இது தொடர்பாக இடைக்கால குற்றப்பத்திருக்கையும் சிபிஐ தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் காவல்துறையின் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டிருந்தது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படாமல் இருந்தது.

தற்போது அந்த விசாரணையானது தொடங்கியுள்ளது. அதன் அடிப்படியில் தற்போது தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ கடந்த 8-ம் தேதி விசாரணை நடத்தியியுள்ளது. குறிப்பாக 2016-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி காவல் ஆணையராக இவர் பணியாற்றிய காரணத்தாலும், மற்றும் மாதவராவின்  குட்கா டைரியில் இவரது பெயர் இடம் பெற்றிருந்ததால் இவருக்கு சம்மன் அனுப்பி சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் ஏற்கனவே அனுப்பட்ட முதற்கட்ட சம்மனில் இவர் ஆஜராகவில்லை. அதன்படி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  சம்மன் அனுப்பிய பிறகுதான் மே 8-ம் தேதி இவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பாக 2012-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு காலகட்டத்தில் தான் அதிக அளவு தடை செய்யப்பட்ட பிறகும் குட்கா விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பல்வேறு கேள்விகள் அசுதோஷ் சுக்லாவிடம் எழுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் குட்கா விவகாரம் தொடர்பாக அனைத்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: