முதல் ஆப்பிள் ஸ்டோர் மும்பையில் வருகிறது

புதுடெல்லி: ஐபோன் நிறுவனம் இந்தியாவில் முதலாவது ஆப்பிள் ஸ்டோரை மும்பையில் நிறுவ உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையை கலக்கி வந்த ஆப்பிள் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக இந்திய சந்தையின் மீது கவனத்தை திருப்பியுள்ளது. சர்வதேச சந்தைகள் கைவிட்டபோதும் இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை அதிகரித்ததே இதற்கு  காரணம். கடந்த காலாண்டில் இந்த நிறுவனத்துக்கு அமெரிக்காவில் இருந்து 44 சதவீத வருவாயும், சீனாவில் இருந்து 18 சதவீதம் வருவாயும், இந்தியா மற்றும் ஆசிய பசிபிக் நாடுகளில் 6 சதவீத வருவாயும் கிடைத்துள்ளது. இருப்பினும், இந்தியாவில்  மற்ற நிறுவனங்களுடன் போட்டி விற்பனையை உயர்த்துவது ஆப்பிள் நிறுவனத்துக்கு சவாலாகவே உள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்களிப்பு ஒரு சதவீதம்தான்.

 எனவே, இந்தியாவில் பிரத்யேக மொபைல் ஸ்டோர் துவக்குவதில் ஆப்பிள் நிறுவனம் தீவிரமாக உள்ளது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், முதலாவது ஆப்பிள் ஸ்டோர் மும்பையில் அமைய உள்ளதாகவும் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: