வாஷிங்டன்: உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மற்றும் ரோபோ மயமாகி காணப்படுகிறது. பல நாடுகளும் மனிதனை ஒத்திருக்க கூடிய மற்றும் மனிதனின் செயல்களை செய்யக்கூடிய ரோபோக்களை உருவாக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வல்லுனர்களின் முயற்சி சினிமாவில் பல முறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான பாராட்டுகளும், அங்கீகாரமும் அவ்வபோது கிடைத்து வருகிறது. நிஜ வாழ்வில் ரோபோக்களின் செயல்பாடுகளை தானே இயங்குவதை நடைமுறைப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள சர்வதேச ரோபோ தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று மனிதர்களை போல இயங்கும் ரோபோக்களை தயாரித்து வருகிறது.