பலாத்கார வழக்கில் தேடப்பட்ட மார்க்சிஸ்ட் கவுன்சிலர் வெளிநாடு தப்பி ஓட்டம்: போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு

திருவனந்தபுரம்: மலப்புரம் அருகே 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு வெளிநாடுக்கு தப்பியோடிய கம்யூனிஸ்ட் கவுன்சிலரை பிடிக்க போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தொழுவானூர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சம்சுதீன் (35). மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன.

மலப்புரம் வளாஞ்சேரி நகராட்சி  கவுன்சிலராக உள்ளார். இவர் அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பலாத்காரம் செய்ததாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவரை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி வளாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது குறித்து தீவிர விசாரணை நடந்து வந்தது.

அதைத் தொடர்ந்து போலீசார் முகமது சம்சுதீன் மீது வழக்கு  பதிவு செய்தனர். விசாரணையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்வதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

Related Stories: