துபாயில் அரசு தாராளம் குறைந்த கட்டணத்தில் மக்கள் படகு சேவை

துபாய்: துபாய் நகரத்திற்கு ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர். அழகிய கடற்பகுதியை கொண்ட துபாய் நகரத்தில்,  பஸ், மெட்ரோ ரயில் என பொதுமக்களுக்கான  போக்குவரத்து வசதிகள் சிறப்பாக  செய்யப்பட்டுள்ளது. அதோடு நீர் வழி போக்குவரத்தும் உள்ளது. துபாய் கிரிக் பகுதியில் கடல் நீரால் கால்வாய் ஏற்படுத்தி நீர் வழி  போக்குவரத்து செயல்பட்டு வருகிறதுமேலும் துபாய் தேரா பகுதியில் இருந்து பர்துபாய் எனப்படும் பகுதி 10.3 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு கடல் வழியாக செல்வதற்கு அப்ரா எனப்படும் பாரம்பரிய படகு போக்குவரத்து பல்லாண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது.

இதன்  கட்டணம் வெறும் ஒரு திர்ஹம்தான் (₹18.90) வசூலிக்கப்படுகிறது இன்று வரை கட்டணம் உயர்த்தப்படாமல் இதே கட்டணத்தில் பயணம் தொடர்கிறது.அதோடு இதே கட்டணத்தில் தற்போது கூடுதலாக 2 வழித்தடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது கிரி பகுதியின் இரண்டு கரை பகுதியில் இருந்தும் அல் சப்கா மற்றும் அல் பகிதி வரை உள்ள வழித்தடம், அல் சப்காவில் இருந்து அல் குபைபா  வரை மற்றொரு வழித்தடம் என இரண்டும் வழித்தடங்கள் அறிமுக செய்யப்பட்டுள்ளது.ஏராளமானோர் இப்படகு போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: