இரட்டை இலை சின்னம் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் சசிகலா சீராய்வு மனு தாக்கல்

டெல்லி: இரட்டை இலை சின்னம் வழக்கில் சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.  முன்னதாக இரட்டை இலை  சின்னம் கோரி அமமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இரட்டை இலை சின்னத்தை ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதன் பின்னர் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேற்று சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சசிகலா தரப்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மனுதாக்கல் செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: