10 பாஜ எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளனர் ‘எங்கள தொட்டே, கெட்டே...’முதல்வர் குமாரசாமி பதிலடி

பாஜவுக்கு மட்டும்தான் ஆபரேஷன் கமலா செய்யத் தெரியும் என்பதில்லை. எங்களுடன் 10 பாஜ எம்எல்ஏக்கள் தொடர்பில் உள்ளனர் என்று முதல்வர் குமாரசாமி பரபரப்பாக தெரிவித்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி பாஜவில் இணைவது உறுதியாகிவிட்டது என்று தெரியவந்துள்ள நிலையில் ஹாசன் மாவட்டத்தில் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவை  தேர்தல் முடிந்த பின் கூட்டணி ஆட்சி கவிழும் என்றும், புதிய முதல்வராக  எடியூரப்பா பதவியேற்பார் என்றும் சில பாஜ தலைவர்கள் கூறி  வருகிறார்கள்.  கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் சக்தி  யாருக்கும் கிடையாது. முன்னாள் அமைச்சர் ரமேஷ்  ஜார்கிஹோளி பாஜவில் இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அடிக்கடி அரசியல்  நாடகம் ஆடுபவர்களை நாம் அதிக நாட்கள் இழுத்து பிடித்து வைத்துக் கொண்டிருக்க  முடியாது. அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை காங்கிரஸ் மேலிடம்  முடிவு செய்யும். கூட்டணி கட்சியில் உள்ள எம்எல்ஏக்களை இழுத்துவிடலாம்  என்று பாஜ நினைக்கிறது. நாங்கள் என்ன வேடிக்கை பார்த்து கொண்டிருப்போமா?  பாஜவில் உள்ள 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.  அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்களோ அதை நாங்களும் செய்ய அதிக நேரம்  போதாது என்பதை நினைவுப்படுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: