குமரி மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை

நாகர்கோவில்,: குமரி மாவட்ட மீனவர்கள் நாளையும், நாளை மறுநாளும் மத்திய இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாகர்கோவில் மீன்துறை உதவி இயக்குநர் மோகன்ராஜ், பங்குதந்தையர் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கங்கத்தினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:   மத்திய இந்திய பெருங்கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடலில் இருந்து இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் ஏப்ரல் 25ம் தேதி அன்று ஒரு குறைந்த காற்றழுத்தம் உருவாகும் நிலை உள்ளது. எனவே ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் இந்த பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: