பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக டிக்டாக் ஆப்பில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்த வாலிபர் கைது: தலைமறைவாக உள்ள 2 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக டிக்டாக் செயலியில் சர்க்சைக்குரிய வகையில் கருத்து பதிவு செய்த வாலிபரை அசோக் நகர் போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்கு பதிவு தினத்தன்று இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 மேற்பட்ட வீடுகள் அடித்து உடைத்தும் பைக்குகள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இரு சமுகத்தினரை சேர்ந்த நபர்களை கைது செய்து உள்ளனர். மேலும், வீடுகளை உடைத்து கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரவியது. இதையடுத்து பலர் பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து டிக்டாக் செயலியில் தங்கள் எதிர்ப்புகளை பதிவு ெசய்து வருகின்றனர். ஒரு சிலர் மீண்டும் கலவரம் ஏற்படும் வகையில் டிக்டாக் செயலியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்து வருகிறனர்.இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை போலீசார் தமிழகம் முழுவதும் கண்காணித்து கைது ெசய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(28) தனது நண்பர்கள் இரண்டு பேருடன் பொன்பரப்பி கலவரம் தொடர்பாக மீண்டும் கலவரத்தை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி டிக்டாக் செயலியில் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அசோக் நகர் போலீசார் நேற்று காலை டிக்டாக் செயலியில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்த விஜயகுமார் என்பவரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: