சுற்றுச்சூழல் அரசியல்வாதி: இவர் ஒரு புது ரகம்

மகாராஷ்டிராவில் உள்ள புனே மக்களவை தொகுதியில் நாளை 3ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் பாஜ சார்பில் கிரிஷ் பால்சந்திரா பாபட்டும், காங்கிரஸ் வேட்பாளர் மோகன் ராம்கிஷன் ஜோசியும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு எதிராக சுயேச்சையாக அனந்த் வன்ஜபி (43) களம் இறங்கியுள்ளார். இவர் சொந்தமாக சைக்கிள் கடை வைத்து நடத்தி வருகிறார்.

அரசியல் கட்சிகள் சார்பில் பிரமாண்ட பேரணிகளும், பிரசார கூட்டங்களும் நடைபெற்ற போதிலும் ஆனந்த் மட்டும் சைக்கிள் மூலமாகவே சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். புனேவை சுற்றுச்சூழல் மாசு இல்லாத நகரமாக மாற்றுவதாக இவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

‘சுற்றுச்சூழல் அரசியல்வாதி’ என தன்னை கூறிக்கொள்ளும் அனந்த், தினமும் 60 கிமீ தூரத்துக்கு சைக்கிள் பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். ‘‘மக்கள் எனக்கு நல்ல ஆதரவு கொடுகின்றனர்’’ என்கிறார் அவர் நம்பிக்கையுடன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: