புதுக்கோட்டை, அரியலூரில் விஷமிகளால் மோதல் 2 மாவட்டங்களில் வன்முறை நீடிப்பு

* கடைகள் அடைப்பு

* வாகன போக்குவரத்து ரத்து n பல இடங்களில் மறியல்

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் சில விஷமிகளால் மோதல் ஏற்பட்டு இரண்டு மாவட்டங்களிலும் வன்முறை தொடர்ந்து நீடிக்கிறது. பொன்னமராவதியில் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஸ், கார், லாரி உள்பட பல்வேறு வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீசாரை கண்டித்தும் விஷமிகளை கைது செய்யக்கோரியும் பல இடங்களில் மறியல்நடந்து வருகிறது.  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்தும், அந்த சமூக பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசியும் ஒரு ஆடியோ வெளியாகி வைரலானது. இந்த வாட்ஸ் அப் ஆடியோ தஞ்சை, பட்டுக்கோட்டை பகுதிகளில் வேகமாக பரவியது. இதனால், பொன்னமராவதியில் அதிகம் வசித்து வரும் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் வியாழக்கிழமை இரவு ஒன்றுகூடி பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவதூறு பரப்பியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி புகாரை மனுவாக எழுதி கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால், நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீஸ் நிலையம் மீது கற்கள் வீசப்பட்டது. பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் தடியடி நடத்தினர்.

 நேற்று முன்தினம் மாலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, திருச்சி சரக டிஐஜி லலிதாலட்சுமி பொன்னமராவதி காவல் நிலையம் வந்தனர். பின்னர், போராட்டக்காரர்களில் முக்கியமானவர்களை காவல் நிலையம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாத வண்ணம் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பொன்னமராவதி தாலுகா முழுவதும் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 21ம் தேதி வரை 3 நாட்கள் இந்த உத்தரவு அமலில் இருக்கும் என ஆர்டிஓ சிவதாஸ் தெரிவித்தார்.

 போராட்டம் காரணமாக பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பொன்னமராவதியில் சனிக்கிழமைதோறும் வார சந்தை கூடும். சுமார் 30 ஆயிரம் பேர் கூடும் இந்த சந்தை நேற்று ரத்து செய்யப்பட்டது.இதற்கிடையில், பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன் பொன்னமராவதி போலீசில் கொடுத்த புகாரைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் மீது தாக்குதல், பொது சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் பேரில் சுமார் 1000 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஒரு சமூகத்தினரை இழிவாக பேசி வாட்ஸ்அப்பில் பதிவிட்ட விஷமிகளை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரச்னை கட்டுக்குள் வந்துள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் மற்றும் வாகன போக்குவரத்து இருக்காது. 3 நாட்களுக்கு பின்

 சகஜ நிலை திரும்பிய பின் போக்குவரத்திற்கு

வழிவகை செய்யப்படும். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார். அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பொன்பரப்பியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்குப் பதிவின்போது சில விஷமிகள் வாக்களிக்க வந்தவர்களிடம் வேண்டும் என்றே தகராறு செய்ள்ளனர். மேலும் அங்கு போட்டியிடும் திருமாவளவனின் சின்னமான பானையை போட்டு உடைத்துள்ளனர். அதன் பிறகு அந்த வாக்குசாவடிக்கு அருகில் உள்ள பகுதிக்குள் புகுந்து வீடு மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கியும் தீ வைத்தும் கோர தாண்டவம் ஆடி உள்ளனர். இதனால் அப்பகுதியில் இருந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வன்முறை வெறியாட்டங்களுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். விஷமிகள் சட்டத்தை கையில் எடுத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.பொன்னமராவதி, பொன்பரப்பியில் தொடரும் வன்முறை காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வன்முறைக்கு பயந்து பலரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பல இடங்களில் மறியல், வாகனங்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இந்த இரண்டு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வழிவகை செய்யப்படும். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அண்டை மாவட்டங்களான திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பொன்பரப்பியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்குபதிவின்போது சில விஷமிகள் வாக்களிக்க வந்தவர்களிடம் வேண்டும் என்றே தகராறு செய்துள்ளனர். மேலும் அங்கு போட்டியிடும் திருமாவளவனின் சின்னமான பானையை போட்டு உடைத்துள்ளனர். அதன் பிறகு அந்த வாக்குசாவடிக்கு அருகில் உள்ள பகுதிக்குள் புகுந்து வீடு மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கியும் தீ வைத்தும் கோர தாண்டவம் ஆடி உள்ளனர். இதனால் அப்பகுதியில் இருந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வன்முறை வெளியாட்டங்களுக்கு பயந்து வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிவிட்டனர். விஷமிகள் சட்டத்தை கையில் எடுத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பொன்னமராவதி, பொன்பரப்பியில் தொடரும் வன்முறை காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வன்முறைக்கு பயந்து பலரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பல இடங்களில் மறியல், வாகனங்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இந்த இரண்டு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்தும், அந்த சமூக பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசியும் ஒரு ஆடியோ வெளியாகி வைரலானது. மோதலுக்கும் வன்முறைக்கும் இந்த ஆடியோவே வித்திட்டது.

* பொன்பரப்பியில் வாக்குசாவடிக்கு அருகில் உள்ள பகுதிக்குள் புகுந்து வீடு மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கியும் தீ வைத்தும் கோர தாண்டவம் ஆடி உள்ளனர். இதனால் அங்கு வசித்து வந்தவர்கள் வன்முறை வெறியாட்டங்களுக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: