புதன்சந்தையில் மாடுகள் விலை உயர்வு

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த புதன்சந்தையில் செவ்வாய்கிழமை மாட்டு சந்தை கூடுகிறது. மாடுகளை வாங்கவும், விற்கவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வருகின்றனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வியாபாரிகள் இச்சந்தைக்கு அதிகளவில் வருகின்றனர்.

நேற்று கூடிய மாட்டுச்சந்தையில் சுற்றுப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக ஏராளமான மாடுகள் விற்பனைக்கு வந்தது. நடப்பு வாரத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி, மாடுகளை வாங்க கேரளாவிலிருந்து அதிக வியாபாரிகள் வந்ததால் மாடுகள் விலை உயர்ந்தது. கடந்த வாரம் 18 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட இறைச்சி மாடு நடப்பு வாரம் 19 ஆயிரத்திற்கும், கடந்த வாரம் 40 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கறவை மாடு 41 ஆயிரத்திற்கும், 13 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட கன்றுகுட்டிகள் 14 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: