மிரட்டும் மாவோக்கள்

ஜார்க்கண்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 29, மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்கும்படி மாவோயிஸ்ட்கள் பல இடங்களில் போஸ்டர்கள்  ஒட்டியுள்ளனர். ராஞ்சியிலிருந்து 32 கி.மீ தொலைவில் உள்ள புன்டு எனுமிடத்தில் அதிகமான அளவில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை அரசு தவறாக பயன்படுத்தி வருவது குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.

குயிடா என்ற கிராமத்தில் இருக்கும் வனத்துறைக்கு சொந்தமான கட்டிடம் மீது மாவோயிஸ்ட்கள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கொல்ஹான் சரக இன்ஸ்பெக்டர் குல்தீப் திவேதி கூறும்போது, ‘மாவோயிஸ்ட்களுக்கு எதிரான ஆபரேஷன் தொடர்கிறது. இதனால்தான் அவர்கள் கலக்கம் அடைந்திருக்கிறார்கள். மக்களின் ஆதரவு துளியும்  அவர்களுக்கு இல்லை. இதனாலேயே தேர்தலை புறக்கணிக்க போஸ்டர்கள் ஒட்டுகிறார்கள்.  தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்படும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: